டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு தொற்று குறைந்து விட்டதாக கூறி டாஸ்மாக் கடையை திறந்தது தவறு என்றும், பொருளாதாரத்தை ஈடுகட்டவும், போலி மது விற்பனை, கள்ளச்சாராயத்தை தடுக்கவும், அரசு சாராயக் கடையை திறந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. டாஸ்மாக் கடையை திறப்பின் மூலம் பல இடங்களில் விபத்து ஏற்படுவது மக்கள் மரணம் அடைவதும், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. 

மாறாக நிதி பிரச்சனையை தீர்க்க மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டு போராடுவதும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக வரி போட்டு நிதி பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உறையூர் குறத்தெரு பாளையம் பஜார் பகுதியில் தனிமனித இடைவெளியுடன் மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன் தலைமையில் பொதுநல அமைப்புகள் தோழமை இயக்கங்கள் ஆதரவோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழதன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பொருளாளர் பாலு, மக்கள் உரிமை கூட்டணி திருச்சி தலைவர் காசிம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஆதிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF