வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வாக்கு எண்ணும் மையத்தை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி, சாரநாதன் பொறியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, துறையூரில் இமயம் கல்லூரி ஆகிய 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதையெடுத்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr