அண்ணாமலை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் - அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு

அண்ணாமலை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் - அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கடிகை மா. ராஜகோபால் ஏற்பாட்டில், முத்தரசநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பலூன் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிமுக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி... கழக பொதுச் செயலாளர் வருங்கால தமிழகத்தின் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உங்களிடத்தில் நேரடியாக கொடுப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சி இங்கே சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நமது திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை பொருத்தவரையில் 4 லட்சம் உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை நாம் ஒவ்வொரு ஒன்றியம் நகரம் பகுதி கழகம் பேரூர் கழகம் வாரியாக ஒவ்வொரு ஊராட்சியாக சென்று கழக நிர்வாகிகள் உறுப்பினர்களிடத்திலே கழகப் பொது செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க நாம் இந்த உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை நேரில் சென்று உங்களிடத்திலே வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் ஒரு சில கருத்துக்களை எடுத்துச் சொல்லுகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியினுடைய கூட்டத்தில் நம்முடைய கழக பொது செயலாளரை பற்றி இரண்டு கோடிக்கும் மேலாக இருக்கக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட கழகத்தினுடைய தொண்டர்களுக்கு பாதுகாவலராக தாயாக இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்தக்கூடிய கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களைப் பற்றி அவதூறாக கருத்துக்களை அங்கே வெளியிட்டார். அண்ணாமலை தமிழக அரசியலிலே ஒரு தற்குறி என்று சொன்னால் அது அண்ணாமலைதான் என்பதை அவருடைய பேச்சு எடுத்துக்காட்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் பல அரசியல் கட்சியினுடைய தலைவர்களும் கூறிக் கொண்டிருக்க கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

உங்களுக்கு தெரியும், அண்ணாமலை இந்த பாரதிய ஜனதா கட்சிக்கு அதுவும் அண்ணாமலை அரசியலுக்கே வந்தது எப்போது என்று சொன்னால், மூன்று வருடம் கூட முடியவில்லை, நம் கிராமத்தில் சொல்லுவாங்க முளைச்சு மூணு இலை கூட விடல அதுக்குள்ள இந்த ஆட்டம் போடுது என்று சொல்வார்கள். அது போல அண்ணாமலை அரசியலுக்கு வந்து மூன்று வருடம் கூட ஆகவில்லை, ஆனால் இன்றைக்கு நமது கழகப் பொதுச் செயலாளரை பற்றி விமர்சனம் செய்கிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு குழந்தைத்தனமாக இருக்கிறார். 1984, அப்போதுதான் அண்ணாமலையே பிறந்திருக்கிறார் ஆனால் நம்முடைய கழக பொதுச் செயலாளர் ஐம்பது ஆண்டு காலம் அரசியலில் அனுபவம் பெற்றவராக இன்றைக்கு 1984ல் பிறந்த அண்ணாமலைக்கு இப்பொழுது வயது 40 தான் ஆகியிருக்கிறது அரசியல் அனுபவம் என்று பார்த்தால் அண்ணாமலைக்கு மூன்று வருடம் கூட இல்லை.

 இப்படிப்பட்டவர் 50 ஆண்டுகாலம் அரசியலிலே நெடிய அனுபவம் கொண்ட நம்முடைய கழகப் பொதுச் செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்று சொன்னால், அரசியலிலே அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி ஒரு குழந்தை அண்ணாமலை ஒரு குழந்தை மாதிரி அந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் பற்றி பேசி இருக்கிறார். அவர் பேசும்போது ஒன்று சொல்கிறார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் நான்காம் இடத்திற்கு வந்து விடும் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். நம் கழகத்திலே இருக்கக்கூடிய 2 கோடியே 20 லட்சம் தொண்டர்கள் மீது கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியாரை தமிழக முதலமைச்சராக ஆக்குவதற்கு அல்லும், பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்ணாமலைக்கு நாம் நினைவுபடுத்திக்கின்றோம்.

அது மட்டும் அல்ல, அண்ணாமலை இன்னொரு கருத்தையும் சொல்லுகிறார் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகின்ற பொழுது வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியாரை அழைத்தோம். அப்பொழுது அவர் தோற்கக்கூடிய வேட்பாளருக்கு நான் ஏன் வர வேண்டும் என்று நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் சொன்னதாக ஒரு வடிகட்டின பொய்யை அந்தக் கூட்டத்தில் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். 

நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு பல கட்சியினரும் தயக்கம் காட்டினார்கள். எந்த மாநில கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் இந்த நாட்டினுடைய பிரதமராக மோடி அவர்கள் வரவேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்த ஒரே தலைவர் நம்முடைய கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார்தான் என்பதை கத்துக்குட்டி அண்ணாமலைக்கு நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அது மட்டுமல்லாமல் இன்னொன்றும் சொல்லுகிறார் நான் பத்து வருடம் பச்சை இங்கிள் கையெழுத்து போட்டேன் என்று ஆனால் நம்முடைய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் எத்தனை வருடம் பச்சை இங்கில் கையெழுத்து போட்டிருக்கிறார் என்பதை அண்ணாமலைக்கு நினைவு படுத்த வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, வாரிய தலைவராக, அமைச்சராக, நான்கரை ஆண்டு காலம் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பச்சை இன்கில் கையெழுத்து போட்டவர் தான் நம்முடைய கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார்.

அண்ணாமலை நான் ஐபிஎஸ் ஐபிஎஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ எப்படி ஐபிஎஸ் படித்தியோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். காவல்துறையை பொருத்தவரையில் அடிப்படை. பதவி என்று சொனால் அது கான்ஸ்டபிள். காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருக்குறது கூட தகுதி இல்லாத தரம் இல்லாதவர் தான் அண்ணாமலை ..

நீ எப்படி ஐபிஎஸ் ஆனாயோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம் அது மட்டுமல்ல அண்ணாமலை பாதயாத்திரை சென்றார். சுதந்திரத்திற்கு முன்னாடி காந்தியின் ஆரம்பித்து எத்தனையோ தலைவர்கள் பாதயாத்திரை போனார்கள் ஆனால் அண்ணாமலை போனது பாதயாத்திரை அல்ல அது ஒரு வசூல் யாத்திரை. எல்லா மாவட்டத்திலும் அவர் நடந்தது எவ்வளவு நேரம் என்று பார்த்தீர்கள் என்றால் இரண்டு கிலோமீட்டர் நடப்பார் இந்த இரண்டு கிலோமீட்டர் நடப்பதற்கு அங்கே இருக்கக்கூடிய தொழில் அதிபர்கள், பல முதலாளிகளிடம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்தவர் தான் இந்த அண்ணாமலை.

இவர் நமது கழக பொது செயலாளர் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை இந்த கூட்டத்தில் வாயிலாக கழகத்தின் தொண்டர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கழக பொது செயலாளர் எடப்பாடியார் தமிழகத்தினுடைய முதலமைச்சராக வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் அண்ணாமலையினுடைய சுயரூபம் மக்கள் இன்றைக்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

திராவிட முன்னேற்றக் கழகத்தை அவருடைய தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்ற மாதிரி பேசுவார் ஆனால் கருணாநிதியுடைய நாணயம் வெளியிட்டு விழாவில் அவருடைய சமாதியில் போய் எந்த அளவிற்கு அடிபணிந்து கிடந்தார் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களோடு ரகசியமான உறவு வைத்துக் கொண்டு பல ஆதாயங்களை பெறக்கூடியவராக அண்ணாமலை இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் ஒரு விழா அந்த விழாவில் அமைச்சர் ஏ.வ. வேலுவும், அண்ணாமலையும் எந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு ரகசியமாக உறவாடினார்கள் என்பது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 

எனவே அரசியலிலே கொள்ளை அடிப்பதை மட்டும் ஒரு திட்டமாக வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்வதை போல விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடிய அண்ணாமலை எங்களுடைய கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என்பதை இந்த நேரத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லுகின்றோம் 

வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலோடு அண்ணாமலையினுடைய அரசியல் வாழ்க்கை முடித்து வைக்கப்படும். இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி பேசினார். இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராமு, ஒன்றிய கழகச் செயலாளர்கள், தொழில்நுட்ப பிரிவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision