வினோத் கண் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு விழா

வினோத் கண் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு விழா

திருச்சி வினோத் கண் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மருத்துவமனையில் முதன்மை நிர்வாக அதிகாரி சத்திய கிருத்திகாவினோத் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக திலகவதி அருணாசலம், ஜெகஜோதி மூர்த்தி, ராஜலட்சுமி ஹரிஸ்,சத்யக்ருத்திகா வினோத், பேபி ஆஷ்னா வினோத் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

மருத்துவமனையில் கடந்த ஓராண்டு காலத்தில் டாக்டர் வினோத் அருணாச்சலம் அவர்கள் சிகிச்சையளித்த 8102 விழிகள் குறித்தும், 397 கண் அறுவை சிகிச்சை குறித்தும் விளக்கவுரை ஆற்றினார். மேலும் இம்மருத்துவமனையில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்களை தெரிவித்தார். அடுத்த நிகழ்வாக மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் காணொளி வாயிலாக தங்களுடைய மன நிறைவையும்   தெரிவித்துக் கொண்டனர். அதனை டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பினர்.

மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வினோத் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினார். விழாவில் மருத்துவமனையில் பணியாற்றிய அனைவரும் விருது வழங்கி கௌரவித்தார்கள். விழாவில் டாக்டர் மூர்த்தி, டாக்டர் இளங்கோ, டாக்டர் புகழேந்தி, டாக்டர் ஹரிஷ், டாக்டர் நந்தகிஷோர் மற்றும்  பாலசுப்ரமணியன், எம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO