திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
தமிழர் திருநாளான தை பொங்கலை திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே VN நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்த பொங்கல் விழாவில் விளையாட்டு லெமன்ஸ்பூன், கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி, தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் ஆகிய நிகழ்வுகளுடன் கோலாகலமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கழக 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. வ்விழாவில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், சபியுல்லா, செந்தில்,
பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக வட்ட கிளை கழகங்களில் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision