திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி 681 காளைகள், 350 காளையர்கள் பங்கேற்பு - 83 பேர் காயம்.

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி 681 காளைகள், 350 காளையர்கள் பங்கேற்பு - 83 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை இக்கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.

அதன்படி, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு பெரிய சூரியூரில் வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து துவங்கி வைத்தார். உச்சநீதிமன்ற வழிபாட்டுதலின்படி, வாடிவாசல், மேடை மற்றும் ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்பட்டிருந்தன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மைதானத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் கண்டு ரசிக்க கேலரி அமைக்கப்பட்டிருந்தது. திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 681 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன.

மொத்தம், 7 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில், 350 மாடுபிடி வீரர்களும் களமாடினர். சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரராக 13 காளைகளை பிடித்து அடக்கிய நவல்பட்டை சேர்ந்த ரஞ்சித் குமார் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வருவாய் கோட்டாட்சியர் அருள் வழங்கினார்.

இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. 681 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 2 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்த போட்டியில் 83 பேர் காயமடைந்தனர்.

இதில் 16 வீரர்கள், 30 பார்வையாளர்கள், 35 மாட்டின் உரிமையாளர்கள், வி.ஏ.ஒ ஒருவர், ஊர் காவல் படை வீரர் ஒருவர் என மொத்தம் 83 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 69 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 14 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision