பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணியினையும், 15வது நிதி குழு மான்யம் நிதியின் கீழ் ரூபாய் 6.15 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும்,
சிறுகனூர் ஊராட்சியில் ரூபாய் 22 இலட்சம் மதிப்பீட்டில் சிறுகனூர் பொது நூலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இருங்களூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பசுமை போர்வையை அதிகரித்திடும் வகையில் மரக்கன்றுகளை நட்டுவைத்தும், எதுமலை ஊராட்சி கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் இருப்பு மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும்,
எதுமலை ஊராட்சி நியாயவிலைக் கடையில் நேரில் பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்தும் ஆய்வு செய்து, எதுமலை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பாலையூர் ஊராட்சி பாலையூர் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று குழந்தைகளின் வளர்ச்சி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், உணவுப் பொருட்கள் இருப்பு பதிவேடுகளையும் பார்வையிட்டு, வழங்கப்படும் முன்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், கரியமாணிக்கம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மருந்துகள் இருப்பு, பணியாளர்களின் விபரம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்து, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision