விலை குறைவான நாப்கின்கள் உற்பத்திக்கு மாநில அரசு உதவிட வேண்டும் - தமிழ்நாடு சானிட்டரி நாப்கின் கூட்டமைப்பு கோரிக்கை

விலை குறைவான நாப்கின்கள் உற்பத்திக்கு மாநில அரசு உதவிட வேண்டும் - தமிழ்நாடு சானிட்டரி நாப்கின் கூட்டமைப்பு கோரிக்கை

கொரோனா தொற்று காரணமாக குறைவான விலை நாப்கின் தயாரிப்பில் தொய்வடைந்த நிலையில், அதனை ஈடுகட்டும் விதமாக அரசாங்கம் உதவிட வேண்டும் என்று தமிழ்நாடு சானிட்டரி நாப்கின்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்யும் தமிழ்நாடு சானிடரி நாப்கின் கூட்டமைப்பு மாநிலம் முழுவதும் 58 சுய உதவி குழுக்கள் மூலம் நாப்கின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். 

விலையில்லா நாப்கின்களை வழங்கும் அரசு சுகாதார மையங்களுக்காக  2018 - 19 மற்றும் 2019 - 20ஆம் ஆண்டுகளுக்கு ஒரு கோடி சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்ய கூட்டமைப்புக்கு அரசு உத்தரவு வழங்கியது. ஆனால் கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு எவ்வித வாய்ப்புகளும்  கிடைக்கவில்லை. இந்த நாப்கின் உற்பத்திக்காக ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும் இயந்திரங்களாக குறைந்தது ரூபாய் 6 லட்சம் முதலீடு செய்துள்ளனர். 600 பெண்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கொரோனா  காரணமாக நாக்கின் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கூட நாப்கின்கள்  வழங்குவதற்கு பெண்கள் சிரமப்பட்டனர். ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைந்த திலகவதி கூறுகையில்... அரசு மருத்துவமனைகளின் விலையில்லா நாப்கின்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிடக்கோரி சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் விலையில்லா சானிடரி நாப்கின்களை 30 சதவீத தேவையை உற்பத்தி செய்ய இயலும் என்பதால், வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும்   , இறக்குமதி செய்யப்பட்ட ஒரு முக்கிய மூலப்பொருளான மரக்கூழ் 100 சதவீத விலை உயர்ந்துள்ளதால் நாப்கின் ஒன்றுக்கு ரூபாய் 30 என்று விலை உயர்வு திருத்தவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn