முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள்

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள்

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசியை துரிதமாக கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மூன்றாவது அலையில் பொதுமக்கள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளாத வண்ணம் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் முகாம்கள் மூலமாகவும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  

திருச்சியில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட   மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில்  
திருச்சியில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதற்கென பிரத்யேகமாக திருச்சி மாநகராட்சி சார்பில் ஜூலை 19 முதல் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இத்திட்டம் குறித்து மாநகராட்சி  மருத்துவர் ராம் கூறுகையில்.... அனைவருக்குமே தடுப்பூசி போட  ஏதுவான வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அதில் குறிப்பாக வீடுகளில் முதியவர்கள் மற்றும் படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் திட்டமானது கடந்த ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி அவர்களின் தலைமையில் குழுவானது ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில் 6385269208 கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் முன் பதிவு செய்துக்கொள்ளலாம். வேன் மூலம் இரண்டு செவிலியர்கள் மற்றும் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழு அவர்களது வீட்டிற்கே நேரிடியாக சென்று திருச்சி மாநகருக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்துகின்றனர். ஆதார் கார்டு மற்றும் மாற்றுத்திறனாளி அட்டைகளைக் சரிபார்த்து அவர்கள் விருப்பப்படி கோவாக்சின் அல்லது கோவிசீல்டு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்காக  மாநகராட்சியால் மாநகராட்சி குழுவினர் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மாநகராட்சியின் இத்தகைய முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எனினும் இன்னும் பல மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு சென்று சேரவில்லை. கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வாய்ப்புகளை பொதுமக்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn