கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் கிலா டீ கடை, அருகில் கடந்த 23.10.21-ந்தேதி ஒருவரை வழிமறித்து எதிரி விஜய் (24) என்பவர் கத்தியை காட்டி ரூ-500/- பணத்தை பறித்து 
சென்றுவிட்டதாக பாலக்கரை காவல் நிலைய குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டும், வழக்கின் எதிரியை 23.10.21ந்தேதி கைது செய்து நீதிமன்ற 
காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் எதிரி விஜய் மீது 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படி எதிரி விஜய் என்பவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு 
பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதேபோல் திருச்சி மாநகரம், கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரிஸ்டோ ரவுண்டானா அருகில் கடந்த 21.10.21-ந்தேதி ஒருவரை வழிமறித்து எதிரி ஜெகதீஷ் (23) என்பவர் கத்தியை காட்டி கைப்பேசி மற்றும் ரூ-500/- பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும், வழக்கின் எதிரியை கடந்த 21.10.21ந்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி 
வைக்கப்பட்டார். எதிரி ஜெகதிஷ் என்பவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாலும், தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால், அவரது தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் எதிரிகள் விஜய் மற்றும் ஜெகதிஷ் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணையை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 40 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2021-ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn