திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வெள்ள பெருக்கு - போக்குவரத்து நிறுத்தம்

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வெள்ள பெருக்கு - போக்குவரத்து நிறுத்தம்

திருச்சியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் மணப்பாறை, ஆலம்பட்டிப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியதால் அங்கிருந்து வெளியேம் தண்ணீர் திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள அரியாற்றில் வந்து சேருகிறது.

இங்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் வரத்து காரணமாக அரியாற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு பிராட்டியூர், தீரன்நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தற்போது திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக வெளியேறி வரும் நிலையில் வேகமாக வரும் தண்ணீர் காரணமாக திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன் நகர் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு திருச்சியிலிருந்து மணப்பாறை, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தீரன் நகர் பிராட்டியூர் பகுதிகளை சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவதும் வாகனங்கள் பழுது ஏற்படுவதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறை மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீரின் வரத்து அதிகரிப்பதால் இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தீரன் நகர் பிராட்டியூர் உள்ளிட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn