பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை மாணவர் பேரவை துவக்கம்

பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை மாணவர் பேரவை துவக்கம்

மாணவர்களுக்காக மாணவர்களைக் கொண்டு மாணவர்களால் நியமிக்கப்பட்ட மாணவர் பேரவை நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமை உரையாற்ற கலைப்புல முதன்மையர் முனைவர் சோபனா அழைக்கப்பட்டிருந்தார். 

வரலாற்றுத் துறையின் மாணவர் துறைத் தலைவராக  ஆரோக்கியமேரி, செயலாளர் சந்திரகலா, விளையாட்டுத்துறை செயலாளர் காவியா, கலைத்துறைச் செயலாளர் ஆர்த்தி துணை செயலாளராக அபிஷேக்ராஜ், இணையவழி தொடர்பாளராக பிரஜித் ஜோனா மற்றும் வகுப்பு தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர் பேரவை அமைக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு வரவேற்புரையை மாணவர் ரிக்கி ரோஷன் வழங்கினார். சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை குறித்து வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவர் தேனி மு.சங்கர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரையை கலைப்புலி முதன்மையர், ஆங்கிலத்துறை துறைத்தலைவர் முனைவர் சோபனா வழங்கி சிறப்பித்தார். மாணவர்களின் உணர்வுகளும், எண்ணங்களும் எதிர்காலத்தின் தேடலில் தான் இருக்க வேண்டும். பேரவை என்பது நல்லதொரு ஆரம்பம். வரலாற்று மாணவர்கள் நாளைய தலைவராக வரவேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.

மாணவர் பேரவை செயலாளர் சந்திரகலா நன்றி உரை வழங்கினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களும் முதுகலை முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காணொளி மூலமாக நேரலையில் இளங்கலை இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை தலைவர், முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டர், முனைவர் எலிஸபெத், பேரா.அருளானந்து, முனைவர்.சாம்ராஜ், பேரா.மனுநீதி, பேரா. தீபன் ராஜ், செல்வி நிறைமதி மற்றும் ஜஸ்டின் ஜோன்ஸ் கலந்து கொண்டனர். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn