திருச்சி மாநகரில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்திட "சாலை பாதுகாப்பு ரோந்து"

திருச்சி மாநகரில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்திட "சாலை பாதுகாப்பு ரோந்து"

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரத்தில் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திட சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol) என்ற குழுவை பள்ளிகளில் தொடங்கிட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி திருச்சி மாநகர வடக்கு மண்டல காவல்துறை சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாவில் சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol) தொடங்கிட கருத்துகேட்பு கூட்டம் காவல் துணை ஆணையர். வடக்கு மண்டலம், திருச்சி மாநகரம் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பள்ளியின் நிவாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும். போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சாலை பாதுகாப்பு ரோந்து உருவாக்கம் பயன்படும் என அனைவரும் சார்பில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்படி நபர்கள் தங்களது பள்ளியில் இந்த சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol ) ரோந்து குழுவை பள்ளிகள் திறக்கபட்ட பின்னர் காவல்துறையுடன் இணைந்து ஏற்படுத்துவோம் என உறுதியளித்தனர். இக்குழுக்களில் சேரும் மாணவ / மாணவியருக்கு காவல்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் போக்குவரத்து தொடர்பான பணியினை அவர்களது சீருடையில் மேற்கொள்வார்கள் என தெரிவித்தனர்.

மேலும் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் காவல் உதவி ஆணையர்கள். காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் திருச்சி மாநகரில் அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு ரோந்து (Road Safety Patrol)என்ற குழு விரைவில் ஏற்படுத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO