டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்ற விவசாயிகள்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டங்கள் மூலமாக விவசாயம் முழுமையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடிக்குள் செல்லும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை என்பதே இல்லாமல் போகும் என்றும், படிப்படியாக அரசின் விவசாய விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் ஆரம்பம் முதலே விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியிலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டனர். முன்னதாக அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் டெல்லி புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn