நான் ஏன் நடிக்கப் போகிறேன் - திருச்சியில் நடிகர் சரத்குமார் பேட்டி

நான் ஏன் நடிக்கப் போகிறேன் - திருச்சியில் நடிகர் சரத்குமார் பேட்டி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் தொகுதி செயலாளர்கள் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி காஜமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார்.... 2024 தேர்தலுக்கு முன்பாக கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். முதலில் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இயக்கமாக இருக்க வேண்டும். தேர்தலில் நிற்க சொன்னால் பலரும் தயக்கப்படுகிற சூழ்நிலை ஏற்படுகிறது. ஏனெனில் மற்ற கட்சியினர் பெரிய அளவில் பணம் செலவு செய்கின்றனர். அவர்களுடன் எப்படி போட்டி போடுவது என்று சிந்திப்பது ஜனநாயகமே இல்லையே.

சட்டமன்றத் தொகுதிக்கு 30 கோடியும், நாடாளுமன்ற தொகுதிக்கு 100 கோடியும் செலவு செய்ய வேண்டுமென்றால் ஒரு சாதாரண குடிமகன் தேர்தலில் எவ்வாறு போட்டி போட முடியும். என்னாலையே முடியாது என்னிடம் பணம் இல்லை. வசதி படைத்தவர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்றால் ஜனமே கிடையாது. ஆன்லைன் ரம்மியில் நீங்கள் நடிக்கிறீர்களே என்ற கேள்விக்கு... முதலில் ஏன் தடை செய்யவில்லை என்று அரசாங்கத்தை கேளுங்கள் பிறகு என்னிடம் கேளுங்கள். Pornography, மது, ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும். நீங்கள் தடை செய்தால் நான் ஏன் நடிக்கப் போகிறேன். கிரிக்கெட் சூதாட்டத்தில் தோனி, விராட் கோலி எல்லோரும் நடிக்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்தால் யார் நடிக்க போகிறார்கள். மது உடலுக்கு கெடுதல் என்று சொல்கிறார்கள் ஆனால் யாரும் குடிக்காம இல்லையே. நமக்கு சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். உலகளவில் ஆன்லைன் உள்ளது எல்லோரும் வருமானத்திற்காக செய்கிறார்கள்.

நடிகர்கள் உடன் வரும் உதவியாளர்களுக்கு ஊதியம் தர‌முடியாது என்று தெலுங்கு சினிமா அறிவித்துள்ளதே என்ற கேள்விக்கு..... தமிழகத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எதிர்தரப்பினருடன் பேசி முடிவெடுப்பார்கள். நிறைய அறிவித்திருக்கிறாய்கள். இதையெல்லாம் நடைமுறைக்கு வருமா என்று தெரியவில்லை. தற்போது வரும் எல்லா படங்களும் ரெட் ஜெயின் மூவிஸ் எடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு.... அவர்களுக்கு எடுக்க சக்தி உள்ளது அதனால் எடுக்கிறார்கள். மின் கட்டண உயர்வு குறித்து பதிலளித்த அவர்... அதிகாரத்தையும் மத்திய அரசை கையில் எடுத்தால் மாநில அரசு என்று எதற்கு உள்ளது தேவை இல்லையே.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லையே என்ற கேள்விக்கு... அவர்கள் திராவிட சித்தாந்தம் கொண்டவர்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை அதனால் சொல்லவில்லை என்றார். இருப்பினும், இனிவரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரில் யாருக்கு ஆதரவு என்று கேட்டபோது, நான் யாருக்கும் ஆதரவில்லை என்று தெரிவித்தார். அங்கு இரட்டை தலைமையா, ஒற்றை தலைமையா என்று தெரியாது. இல்லை வெளியில் இருந்து வருவார்களா என்றும் தெரியாது. நாங்களும் மூன்றாம் கட்சி தான். எனக்கும் முதல்வராக வர வேண்டும் என்று ஆசை உண்டு. ராகுல் காந்தியின் நடைபயணம் ஒன்றும் தண்டி யாத்திரை கிடையாது. இயக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த பேரணிக்கு மக்களின் ஈர்ப்பு இருக்க வேண்டுமா என்று தெரியாது. இருப்பினும் அது வெற்றி பெற வாழ்த்துக்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO