ஈர நிலங்கள் குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஒவ்வொரு ஆண்டும் உலக ஈர நில நாள் பிப்ரவரி 2ம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 2 ல் ஈர நில நாளை முன்னிட்டு மாநில ஈர நில ஆணையத்தின் (State wetland authority) வழிகாட்டுதலின்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மனைவியர்கள் 15 நபர்களுக்கு ரொக்க பரிசாக ரூபாய் 42,000/= மாவட்ட வன அலுவலர் ஜி கிரண் வழங்கினார். மேலும் ஈர நிலங்கள் மாசடைவதால் பறவை இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஈர நிலங்கள் மிக மிக அவசியம் என விரிவாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்வின் போது வனச்சரக அலுவலர் கோபிநாத் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn