வனத்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

வனத்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மண்டல அளவில் விளையாட்டுப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவில் போட்டி நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள். மாநில அளவில் தேர்வு பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் .

27வது தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாநில அளவிலான வீரர் வீராங்கனைகளின் தேர்வு கடந்த வாரம் கோவையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகர் துப்பாக்கி சுடும் மன்றத்தில் நடைபெற்றது. இதில் 12 வன மண்டலத்திலிருந்து 22 ஆண் வீரர்கள் மற்றும் 5 பெண் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு 0.22 ரக தோட்டாக்கள் தலா 10 வழங்கப்பட்டது. போட்டியை திருச்சி மாவட்ட வன அலுவலர் சி. கிருத்திகா துவங்கி வைத்தார். போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் P. ஹரிஹரன் வனச்சரக அலுவலர் திருச்சி மண்டலம், இரண்டாம் இடம் R. சரவணன் வனவர் திருச்சி மண்டலம், மூன்றாம் இடம் S. மகேஷ் வனக்காப்பாளர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஈரோடு.

 இதே போன்று பெண்கள் பிரிவில் முதலிடம் D.மேரி லென்சி வனச்சரக அலுவலர் திருச்சி மண்டலம். இரண்டாம் இடம் P. சிந்துஜா வனக்காப்பாளர் திருச்சி மண்டலம், மூன்றாம் இடம் T. பிருந்தா வனச்சரக அலுவலர் திருநெல்வேலி மண்டலம். போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி துப்பாக்கி சுடும் மன்ற முதுநிலை நிர்வாக அலுவலர் சந்திரமோகன் மற்றும் திருச்சி வன சரக அலுவலர் கோபிநாத் செய்திருந்தார்கள். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision