தேசிய விண்வெளி தினவிழா– விண்மீன் பார்வை ‘'24”

தேசிய விண்வெளி தினவிழா– விண்மீன் பார்வை ‘'24”

சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இயற்பியல் முதுகலை & ஆராய்ச்சித் துறையானது டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் கழக மின்னணுவியல் துறை மற்றும் SPACETREK கோளரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2, 2024 வரை தேசிய விண்வெளி தின விழாவை, "விண்மீன் பார்வை'24" என்னும் தலைப்பில் நிகழ்த்தியது.

இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பிரபஞ்சத்தை கண்டு களித்த உணர்வை ஏற்படுத்தியது. சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி.அல்லி தொடங்கி வைத்தார். அவர் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வண்ணம் உரை நிகழ்த்தியதுடன், இத்தகு திட்டத்தை ஏற்பாடு செய்த பேராசிரியர்களின் முயற்சியைப் பாராட்டினார்.

முதுகலை & இயற்பியல் துறை மற்றும் மின்னணுவியல் துறை மாணவியர், பிஎஸ்எல்வி, ஆர்யபட்டா, எஸ்எஸ்எல்வி டி3 ஈஓஎஸ் 08 ராக்கெட் மாடல், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர், ஆதித்யா - எல்1 மாடல் போன்ற ராக்கெட் உந்துவிசை மற்றும் விண்வெளிப் பயணத்தின் இயக்கவியலை விளக்கும் மாதிரிகளை அருமையாக செய்து காட்டினர். விண்வெளியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைக் காட்டும் கண்காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

விண்வெளியில் மனித முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது. மேலும் மாணவர்கள் காட்சிகளுடன் ஒன்றி அனுபவத்தின் வாயிலாக கற்றுக்கொள்ளவும் உதவியது. தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி பாய்லர் பிளாண்ட் பள்ளி, திருச்சி சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி காமகோடி வித்யாலயா, திருச்சி காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி, டவுன்ஹால், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆர்.டி.மலை, ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என சுமார் 2000 மாணவ, மாணவியர் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்த நிகழ்வு இளம் மாணவர்களிடையே வளர்ந்து வரும் விண்வெளி அறிவியல் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும், அண்டவெளியில் நிகழ்ந்திடும் அதிசயங்களை ஆய்வு செய்ய தூண்டிடும் மாபெரும் நிகழ்வாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக, "விண்மீன் பார்வை ''24" ஒரு விண்வெளி கல்வி அனுபவத்தை ஏற்படுத்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision