காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி கடந்த (04.02.23)-ந் தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாமும், (20.05.23)-ந் தேதி திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை காது சம்மந்தபட்ட சிறப்பு முகாமும், (17.06.23)-ந் தேதி திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் ஏர்போர்ட் மொராய்ஸ்சிட்டியில் "இதயம் காப்போம்" என்ற தலைப்பில் இதயம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (13.07.23)-ந் தேதி காலை 1000 மணியளவில் திருச்சி மாநகரம் கேகேநகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில், காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கான பிரத்தியோகமாக நடத்தப்படும் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமினையும், "அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ்" என்கிற வாகனத்தையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அப்போலோ சிறப்பு மருத்துவமனை சார்பாக நீலகண்ணன் மூத்த தலைமை செயல் அதிகாரி மற்றும் சாமுவேல், மூத்த பொது மேலாளர் தலைமை அதிகாரி, திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு & வடக்கு), கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை) காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த முகாம் 13.07.23 முதல் 4 நாட்கள் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில், அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் வாகனத்தில் இதயம், நுரையீரல், எலும்பு. கல்லீரல், கணையம், இரத்த அழுத்தம், சிறுநீரகம்,ECG, ECHO, X Ray என 28 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யும் வகையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் கலந்து கொண்டுள்ளார் எனவும், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பரிசோதனை இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்கள்.

மேலும் காவல்துறையும், மருத்துவத்துறையும் 24*7 பணி புரிவதாகவும், இதனால் யாரும் உடல்நலன் குறைகள் ஏற்பட்டால் உதாசீனபடுத்தக்கூடாது எனவும், காவல்துறையில் Stress level அதிகமாக உள்ளது எனவே அதனை அவ்வப்போது பரிசோதனை செய்து சரி செய்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு நேரமின்மை காரணமாக பரிசோதனை செய்ய முடியாமல் போகிறது எனவும், எனவே காவலர்கள் இருக்கும் இடத்திற்கே உபகரணங்களை கொண்டு வந்து பரிசோதனை செய்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். காவல்துறையினர் அனைவரும் வருடம் ஒருமுறையாவது தங்களது இதயம், கல்லீரல் போன்ற முழு உடல் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும், இம்முகாமை நடத்தும் அப்பல்லோ மருத்துவமனைக்கு திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்கள்.

(13.07.23)ந் தேதி நடைபெற்ற மருத்துவ முகாமில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 216 நபர்களும், காவலர் குடும்ப உறுப்பினர்கள் 105 நபர்களும், அமைச்சு பணியாளர் 1 என மொத்தம் 322 நபர்கள் கலந்து கொண்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு பயனடைந்தார்கள். மேலும் இம்மருத்துவ முகாம் வருகின்ற (16.07.23)ந் தேதி வரை நடைபெற உள்ளதால், காவல்துறையினர் மற்றும் காவல்துறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பயனுள்ள இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision