திருச்சியில் முன்அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த நபர்கள் கைது

திருச்சியில் முன்அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த நபர்கள் கைது

 திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த   அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் பட்டாசு விற்பனை செய்யும் முறையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுமாறு நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அப்படி வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோரை கண்காணிக்க காவல்துறை ஆணையர்கள் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கியுள்ளார்.மேற்படி நிபந்தனைகள் வழங்கப்பட்ட நிலையில் கோட்டை காவல் நிலைய எல்லையில் உரிய முன் அனுமதியின்றியும் எரிபொருள் சட்ட விதிகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்த திருமலை என்பவரிடம் 14 பட்டாசு பெட்டியும் பாலமுருகன் என்பவரிடம் 20 பட்டாசு பெட்டியும் கார்த்திகேயன் என்பவரிடம் 20 பட்டாசு பெட்டியும் விற்பனை செய்தவர்களை கைது செய்தும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1,30,000 மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி முறையான முன் அனுமதி என்று இதுபோன்று பட்டாசு விற்பனை செய்வோர் மீது கடுமையான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர்  எச்சரித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO