ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட விஜய்

Mar 23, 2023 - 01:08
 1123
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட விஜய்

திருச்சி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று (21.03.2023) 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட விஜய் என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.

விசாரணை நடத்தி விட்டு அவனை அழைத்துச் செல்ல அவரது மனைவிக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்பொழுது மனைவி இன்னும் திருந்தவே இல்லையா நீ திருந்த மாட்ட குடிகாரன் என்று திட்டி உள்ளார். அதற்கு கணவர் விஜய் திருந்தி விட்டதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கோபத்தில் காவல் நிலையத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து கண்ணாடியை எடுத்து கழுத்தில் அறுத்துக் கொண்டார். தற்போது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் விஜய் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற (வடக்கு) காவல் துணை ஆணையர் அன்பு காவல் துறையினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn