அமைச்சர் நேரு சொந்த ஊர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அமைச்சர் நேரு சொந்த ஊர் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்


   திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள  எல்லையம்மன்  கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்றார்.


லால்குடியை  அடுத்த புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது காணக்கிளியநல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் பிறந்த ஊராகும். இந்த ஊராட்சியில்  அமைந்துள்ள  எல்லையம்மன்,  ரேனுகாதேவி அன்னை, ஜமதக்னி முனிவர்,  பாப்பாத்தி அம்மன்,  கால பைரவர் திருக்கோயில் சிதிலங்கள் நீங்கி சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் செய்து கருங்கல்லால்  கர்ப கிரஹம், அர்த்த மண்டபம் பரிவார ஆலயங்கள் மஹா மண்டபம் முதலியவை புதிதாக அமைத்து விமானங்கள் எழுப்பி அழகிய சுதை சிற்பங்கள் வண்ணம் தீட்டி அழகு மிளிர அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று  காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெற்றது.


 

இதனையொட்டி கடந்த 21 ம் தேதி காலை 8 மணிக்கு ஹீ விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமமும், 22 ம் தேதி  காலை  9 மணிக்கு சாந்தி ஹோமமும்,  திசா ஹோமமும், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல்,  புனித நீர் எடுத்து வருதல் மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 23 ம் தேதி காலை 8 மணிக்கு யாக பூஜை  ஜயமும், 24 ம் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை மற்றும் திரவிய ஹோமம், நாடி சந்தனம், 9 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல், 9.30 மணிக்கு  விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூலவர் எல்லையம்மன் கும்பாபிஷேகம், காலை 10.45 மணிக்கு  ஏனைய பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.


   விழாவில் காணக்கிளியநல்லூர்,  பெருவளப்பூர், ரெட்டிமாங்குடி, கண்ணாக்குடி, விடுதலைபுரம், புள்ளம்பாடி, லால்குடி, டால்மியாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn