சலூன்களில் முக சவரம் மற்றும் முடிதிருத்தும் கட்டணம் உயர்வு
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்டுள்ள சலூன் கடைகளில் தனிமனித இடைவெளியே பின்பற்ற வேண்டும். அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளரும், சலூன் கடைகாரரும் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இடம் வாடகை மற்றும் விலைவாசி உயர்வு, அழகு சாதன பொருட்கள், மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும்
ஜனவரி 01.01.2022ம் தேதி முதல், முக சவரம் மற்றும் முடிதிருத்தும் கட்டணத்தை உயர்த்த திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் & முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் முடிவு செய்து தற்போது அறிவிப்பு வெளியிட்டள்ளது.
அதன்படி இன்று முதல் முக சவரம் மற்றும் முடிதிருத்தும் கட்டணத்தை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn