திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து ஓட்டுனர் பலி

திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து ஓட்டுனர் பலி

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே சாலையோரம் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து மதுரைக்கு கோழி கழிவுகளை ஏற்றி சென்ற மினி லாரி நின்ற கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் மாற்று ஓட்டுனர் ஆனந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி எந்தவித சமிக்கை விளக்குகளையும் எரிய விடாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. 

இந்த இரண்டு லாரிகளும் மோதிக்கொண்ட விபத்தில் கண்டெய்னர் லாரி சாலையை விட்டு மரங்கள் அடங்கிய புதருக்குள் சாய்ந்தது கோழிக்கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது.
இதனால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு புறமுள்ள பாதையில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை மன்னார்புரம் பகுதியில் மேம்பாலம் முடிவில் இடது புறத்தில் இரவு நேரங்களில் அதிக அளவு கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

அந்தப் பகுதிகளில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து இருக்கிறது. இந்நிலையில் அங்கு நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் சமிக்கைகள் எரிய விடாமல் நிறுத்துவதால் அந்த வழியாக செல்லக்கூடிய மற்ற வாகனங்கள் விபத்து உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.

விபத்துகளை குறைப்பதற்கு ரோந்து போலீசார் அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி விடாமலும், இருள் சூழ்ந்து இருக்கும் பகுதிகளில் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO