பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க திட்டம்

பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு - பணிகளை விரைந்து முடிக்க திட்டம்

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision