திருச்சியில் 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல் - போராட்டம்

திருச்சியில் 2 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல் - போராட்டம்

பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு நிலை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது, அதேபோன்று பீக் ஹவர்ஸ் கட்டணத்தையும் 15சதவீதம் தமிழக மின்வாரியம் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளதுடன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் மின்சார வாரியத்தின் இந்த தொழில் விரோத நடவடிக்கையை கண்டித்து இன்றைய தினம் தமிழக முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலத்தில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் நிறுவனம் மற்றும் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடியில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் நிறுவனங்கள், வாழவந்தான் கோட்டை தொழில் நிறுவனங்கள் என பல இடங்களில் இன்றைய தினம் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிலை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீள முடியாமல், உற்பத்தி எடுக்க முடியவில்லை, தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, சிறு தொழிலை வளர்க்கச் சொல்லும் அரசு ஒருபுறம் மின் கட்டண உயர்வை அறிவித்து வருவதால் எவ்வாறு சிறு தொழில்களை வளர்க்க முடியும்.

கடன் வாங்கி தொழில் செய்யும் தங்களுக்கு இது போன்று கட்டண உயர்வு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அரசு இதுபோன்று கட்டண உயர்வு அறிவித்துள்ளதை நிறுத்தினால் நாங்கள் தொழிலாளர்களுக்கு ஓவர் டைம் கொடுத்து அவர்களுக்கு பத்தாயிரம் கூட சம்பளம் கொடுப்போம் என்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உற்பத்தி பொருட்கள் செய்யக்கூடிய சிறு குறு நிறுவனங்கள் இன்று கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், இன்று உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு உற்பத்தி பணியில் ஈடுபடாத நிறுவனங்களுக்கு உற்பத்திக்கான ஆர்டர் தொடர்ந்து வழங்கப்படாது என மிரட்டுவதால் சிறுகுறு நிறுவன உரிமையாளர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision