திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ சமூக நல சங்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் ஜோசப் கண் மருத்துவமணை இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் கிராப்பட்டி மருத்துவர் சமூக சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சங்க உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் ரத்த பரிசோதனை, கண், காது, மூக்கு தொண்டை பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன், துணை தலைவர்கள் ஸ்டாலின், குஞ்சுவேல், செல்வராஜ், ஆழ்வார்தோப்பு கோபி மற்றும் துணை செயலாளர்கள் ராமமூர்த்திசித்ரா, ரங்கராஜ், பாண்டியராஜ், ஜி மதியழகன், திருவைக்குமரன்

இளைஞரணி நிர்வாகிகள் கோர்ட் சுப்ரமணி, பாலகிருஷ்ணன், ஏர்போர்ட் கோபி மற்றும் திருச்சி மாநகர அத்துணை அமைப்பாளர்களும் மாவட்ட பிரதிநிதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO