பனை விதைகள் நடும் விழா
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தியமலை ஏரியில் கைஃபா -கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பாக மக்கள் பங்களிப்பில் புனரமைப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.இந்த பணியில் முதல் கட்டமாக ஜுலை 15 கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் அன்று புனரமைப்பு பணி துவங்கப்பட்டு முதல் கட்டமாக 7.5 கிமீ ஏரியின் வரத்து வாய்க்காலான புங்கன் வாரி தூய்மை செய்யப்பட்டது வாரியின் இரு புற கரைகளும் பலபடுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஏரியில் உள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றும் பணியும் ஏரியை சுற்றி கரை போடும் பணியும் துவங்கப்பட்டது.
இன்று கரை அமைக்கப்பட்ட பகுதியில் 10000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.இதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். Kaifa திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அசோக் ராஜா, Exnora லதா, OASYS பொறியியல் கல்லூரி இளைஞர்கள் மற்றும் நீர் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் பாண்டியன், மோகன்ராஜ், பால்ராஜ், சதீஷ், தினகரன், வடிவேல் சமூக சேவை நண்பர்கள் மற்றும் கலாமின் விதைகள் அறக்கட்டளை லோகநாதன் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு பனைவிதை விதைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision