குழந்தைகள் தினம் - குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள்

குழந்தைகள் தினம் - குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி உடன் இணைந்து குழந்தைகள் தின விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் கெளதம் மற்றும் செயலர் முகமது நாசர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜோசப் மற்றும் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி அளவில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியை சரண்யா அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் கெளதம் தமது உரையில்.... இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று நேரு கூறினார். குழந்தைகளுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை என்பது போல, அந்த குழந்தைகள் சிறு வயதில் நமக்களிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. அப்படியான குழந்தைகள் கொண்டாடும் தினமாக இன்று உங்களை மகிழ்விப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் செயலர் நாசர் அவர்கள் தனது உரையில்.... இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நேரு தெரிவித்தார். ஜவஹர்லால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். அவரை குழந்தைகள் அனைவரும் ‘சாச்சா நேரு’ (மாமா நேரு) என அழைக்கிறார்கள். நேரு குழந்தைகளை இந்த நாட்டின் சொத்தாக நினைத்தார். அவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவர்.

1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் படி நவம்பர் 20 ஆம் தேதி தான் “உலக குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. ஆனால் 1964 ஆம் ஆண்டு பண்டிட் ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் அப்போதைய அரசு அவரது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் குழந்தைகளின் சிறப்பு பண்புகளையும், திறமையையும் நாம் போற்றிட வேண்டும். இன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது பெற்றோர்களும் இந்நாளில் உறுதியொன்றை எடுக்க வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது விருப்பத்தை திணிக்காமல் அவர்கள் விரும்பும் கல்வியை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சரண்யா, உஷாராணி, பப்பிஸ்டா ஆகியோர் செய்து இருந்தனர். நிறைவாக ஆசிரியை சகாய ராணி நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision