3 மணி நேரமாகியும் வராத மருத்துவர் - பரிதமாக உயிரிழந்த நாய்

3 மணி நேரமாகியும் வராத மருத்துவர் - பரிதமாக உயிரிழந்த நாய்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் மற்றும் பிரகதீஸ்வரி சமூக ஆர்வலர்களாக உள்ளனர். இந்நிலையில் சாலைகளில் நோய்வாய் பட்டு சுற்றி திரியும் நாய்களை பிடித்து கொண்டு வந்து அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி பின்னர் அந்த நாய்களை சம்பந்தப்பட்ட இடத்தில் விட்டு வருகின்றனர். இப்படி பல ஆண்டுகளாக தங்களது சமூக சேவையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டூர் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இருந்த நாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அதனை பார்த்த ஹரிஹரன் பிரகதீஸ்வரி பிடித்து சென்று அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்ததோடு உணவு அளித்து பராமரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த நாய் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் அருகே காட்டூர் பாப்பா குறிச்சியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த நாயை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் தேனாதிராஜா பணியில் இல்லை. ஆனால் ஆய்வாளர் முருகன் மட்டுமே இருந்துள்ளார். அவர் மருத்துவர் வந்தால் தான் மருத்துவம் பார்க்க முடியும் என்றும், அவர் தற்பொழுது அரியமங்கலம் கால்நடை மருத்துவமனையில் உள்ளார் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டதாகவும், அதற்கு சேனாதிராஜா அரியமங்கலம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் என்றும், அவர் பாப்பா குறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு பொறுப்பு அலுவலராக உள்ளார். அவருக்கு இன்று பாப்பாகுறிச்சி கால்நடை மருத்துவமனையில் தான் வேலை பார்க்க வேண்டும் வந்து இருப்பாரே என கூறியதாகவும்

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு பொழுது அவர் தஞ்சையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இப்படி பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் குறித்த நேரத்தில் மருத்துவமனை இல்லாததோடு அந்த நாய் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்களின் பல இந்த கால்நடை மருத்துவமனைக்கு வரவேண்டிய மருத்துவர் எப்பொழுதும் சரிவர வருவதில்லை என்றும் இதனால் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுது அதனை மருத்துவம் பார்க்கமுடியாத அவல நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததோடு காட்டூர் பாப்பாக்குறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 3மணி நேரமாக தஞ்சையில் இருந்து வந்து கொண்டிருப்பதாக டாக்டர் கூறியதால் சமூக ஆர்வலர்கள் இறந்த நாயுடன் கால்நடை மருத்துவமனையிலேயே காத்திருந்தனர். தஞ்சையில் இருந்து ஒரு மணி நேரத்தில் காட்டூர் வந்துவிடலாம். ஆனால் மருத்துவர் மூணு மணி நேரமாக வராமல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நம் செய்தியாளர் விளக்கம் கேட்டதற்கும் நேரில் வருகிறேன் என்று ஒரு மணி நேரமாக கூறியதால் செய்தியாளர் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision