திருச்சியில் 6 நபர்களிடமிருந்து ரூ.2,20,000/- மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சியில் 6 நபர்களிடமிருந்து ரூ.2,20,000/- மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைகுட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ்ரோடு பாலத்தின் கீழ் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் கஞ்சாவை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ரோந்து சென்றபோது, TN 55 BR 7857 Maruthi Swift Car மற்றும் பதிவு எண் இல்லாத R15 Yamaha இருசக்கர வாகனத்தில் பெரிய மூட்டையுடன் சந்தேகம்படும்படியாக நின்றுக்கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், எதிரிகள் 1) நாகராஜ் (20), 2) வெற்றி (எ) மிகாவேல் (20), 3) தயாநிதி (22),  4) முகமது அப்துல் ரஹ்மான் (22), 5) நோபில் (எ) இக்னேசியஸ் 6) ஹரிஹரன் (19) ஆகியோர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து ரூ.2,20,000/- மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா மூட்டையை விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தும், பணம் ரூ.50,000/- மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கைப்பற்றியும், வழக்குப்பதிவு செய்தும் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்கண்ட எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள். திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்றவைகளால் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO