திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தின போட்டிகள்

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தின போட்டிகள்

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஐ.நா.-வின் அறிவுறுத்தலின்படி, சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி, 'உலக கழிவறை தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கழிவறை பாதுகாப்பையும் சேர்த்து உறுதி செய்கிறது.நீரும், சுகாதாரமும் மனிதர்களின் அடிப்படை உரிமையாக இருந்தபோதும், கிராமப்புற மக்களுக்கும், வீடற்றவர்களுக்கும் கழிவறை இன்னமும் சிக்கலான நிலையைத்தான் ஏற்படுத்தி வருகிறது.உலக கழிவறை அமைப்பு தான், முதலில் உலக கழிவறை தினத்தை அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு 2001. சுகாதாரத்தை முழுவதும் பரப்ப முயன்று வரும் ஐ.நா., 2013ஆம் ஆண்டில் உலக கழிவறை தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு முழு சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், கழிப்பறைகள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.


அதன்பின், திறந்வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும். சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சுகாதாரமான கழிப்பறை பயன்பாடு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெற உள்ளது மேலும் இது குறித்து விவரங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமல்லாமல், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வோம். இந்த உலக கழிப்பறை தினத்தில் அதற்காக உறுதி ஏற்போம்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO