திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சூரியசக்தி மூலம் நீரை சூடாக்கும் முறை தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சூரியசக்தி மூலம் நீரை சூடாக்கும் முறை தொடக்கம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில் இன்ஜின்கள் தயாரித்தல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு எஞ்ஜின்களுக்கான உதிரிபாகங்களை வெப்ப நீரால் சுத்தப்படுத்துவதற்காக இதுவரை மின்ஹீடர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதற்கு பதிலாக பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டர் (சூரிய சக்தி) என்ற நீரை சூடாக்கும் புதிய யூனிட் நிறுவப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், பொன்மலை ரயில்வே பணிமனை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த யூனிட் ஆனது ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் சுடுநீரை சூரிய சக்தியை மட்டும் பயன்படுத்தி வழங்கும் திறன் கொண்டவையாகும்.

வழக்கமாக மின்சாரத்திற்கு பதிலாக சோலார் கான்சென்ட்ரேட்டரை நிறுவுவதன் மூலம் பொன்மலை பணிமனையானது வருடத்திற்கு சுமார் 1 லட்சத்து 90 ஆயிரத்து 895 யூனிட் மின்சாரம் மற்றும் ரூபாய் 15 லட்சத்து 27 ஆயிரத்து 160 சேமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn