போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஏழு பேர் கைது.
திருச்சி மாவட்டம், துறையூரில் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் அப்துல்லா. நேற்று இரவு அப்துல்லா போக்குவரத்து போலீசார் உடன் உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்,
அப்பொழுது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த உப்பிலியபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். இருவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் உதவி ஆய்வாளருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணமூர்த்தி தொலைபேசியில் நண்பர்களை அழைத்துள்ளார். உடன் அங்கு வந்த சரத்குமார், வெள்ளையன், கலைவாணன், மாதவன், சபரிநாதன், பாலகுமார் கிருஷ்ணமூர்த்திஆகிய ஏழு பேர் காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லாவை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் அப்துல்லா உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் ஏழு பேரை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision