தேசிய கல்லூரியில் சான்றிதழ் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கும் விழா

தேசிய கல்லூரியில் சான்றிதழ் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சி தேசிய கல்லூரியில் நூலக மட்டும் தகவல் அறிவியல் துறை சார்பாக சான்றிதழ் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. நூலக தகவல் அறிவியல் துறையின் ஆறு மாத சான்றிதழ் படிப்பு முடித்த 32 தேசிய கல்லூரி மாணவர்களுக்கு இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் எஸ் ஸ்ரீனிவாச ராகவன் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

தேர்வு நெறியாளர் சிறப்புரை நிகழ்த்தும் பொழுது, சான்றிதழ் படிப்பு முடித்த நூலகவியல் மாணவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். ஆராய்ச்சி துறை, தொழில்நுட்பத்துறை, மாவட்ட பொது நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் நூலக உதவியாளர்கள் மற்றும் நூலகர்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி படிப்பின் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நூலகவியல் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறப்பு விருந்தினர் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் இதுபோன்ற சான்றிதழ் மற்றும் பட்டைய படிப்புகள் படிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்வதுடன் தங்களுடைய வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் தங்களுடைய தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் கா.ரகுநாதன் சான்றிதழ் பெற்ற மாணவர்களை பாராட்டினார். கல்லூரி முதல்வர் K. குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் முனைவர் பென்னட், முனைவர் இளவரசு மற்றும் முனைவர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

கல்லூரி நூலகர் மற்றும் நூலக தகவல் அறிவியல் துறையின் ஒருங்கிணைப்பாளருமான த.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். நூலக அறிவியல் துறையின் மாணவர்கள் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். தர்மேஷ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை நல்கினார்.

இவ்விழாவினை நூலக உதவி நூலகர் ராதா ஜெயலட்சுமி, நூலக உதவியாளர்கள் அன்புமணி, லட்சுமணன், கலியமூர்த்தி, உமா மகேஸ்வரி மற்றும் ஹரிஹரன் ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision