யோகா என்பது பயிற்சி அல்ல உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும் வாழ்வியல் வழிமுறை

யோகா என்பது பயிற்சி அல்ல உடலையும் மனதையும் ஒன்றிணைக்கும் வாழ்வியல் வழிமுறை

உலகெங்கும் இன்று பரவியுள்ள மிக முக்கிய கலை யோக கலையாகும் . இந்தியாவில் தோன்றிய இக்கலையானது இன்று மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. இக்கலையின் சிறப்பினை விவரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 2015 முதல் ஜூன் 21 அன்று உலக யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகா என்ற வார்த்தைக்கு "ஒன்றிணைதல்" என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும் போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும் போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள். யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல.

எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும். யோக கலையின் முக்கிய முக்கியத்துவம் மற்றும் இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி திருச்சி தேசிய கல்லூரியின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் துறை இயக்குனர் மற்றும் தலைமை ஆராய்ச்சித்துறை டாக்டர் பிரசன்னா பாலாஜி பல பயனுள்ள தகவல்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.


ஒரு ஆசனம் (Asana) என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். அவற்றுள், சில குறிப்பிட்ட நிலைகள், ‘யோகாசனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “யோகா” என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை “யோகாசனம்” என்று அழைக்கப்படுகிறது.

உடல் மற்றும் மனரீதியான பலன்கள் :
முதுகு வலியில் இருந்து நிவாரணம்
மூட்டு வலி குறைகிறது தன்னியக்க நரம்பு மண்டலத்தில் சமநிலையை ஏற்படுத்துகிறது. இதயத்தின் திறன் மேம்படுகிறது. சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது. இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு இயல்பாகிறது. உடலின் கழிவு வெளியேற்றும் செயல் மேம்படுகிறது. தசைக்கூடுகள் வளைந்து கொடுக்கும் தன்மை பெறுகிறது உடல் எடை சீராகிறது. தூக்கம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது. பலம், மீண்டு வருதல், தாங்கும் ஆற்றல், சக்திநிலை, தளரா உறுதி அதிகரிக்கிறது. உடல் பாகங்களிடையே ஒருமித்த செயல்பாடு, கண்-கை கூட்டு செயல், சமநிலை அதிகரிக்கிறது. பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைகிறது, கவனம், மனம் குவிப்பு திறன், நினைவாற்றல், கற்றல் திறன் அதிகரிக்கிறது.

இன்றைக்கு கொரானா தொற்றால்   எல்லோரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பிராணயாம மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யலாம். இந்த பயிற்சியை செய்வதன் மூலம்  நரம்பு மண்டலத்தில் (ANS) மிகவும் நன்மை பயக்கும் நுரையீரலின் நெகிழ்ச்சி தன்மையை மீட்டெடுக்கிறது மற்றும் ஆஸ்துமா நிலைமைகளில் நன்மை பயக்கும். தினசரி பயிற்சி செய்தால் அது தியான நிலைகளைத் தூண்டி மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதில் நன்மை பயக்கும். இது மனதைத் தளர்த்தி மன அழுத்தத்தைக் குறைத்து பதற்றத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. இது கோபத்தையும் விரக்தியையும் குறைக்க உதவுகிறது.

இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது மற்றும் நச்சுக்களை வெளியிடுகிறது. மன அமைதியை அளிக்கிறது மற்றும் உங்கள் உடலில் லேசான தன்மையை வழங்குகிறது. எடை குறைக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான கொழுப்புகளை உருக்குகிறது. தினசரி பிராணயாமாக்கள் மூலம் எளிதாக சுவாசிக்கவும். தினசரி பிராணயாமா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவுக்கான ஒரு முழுமையான ஆரோக்கிய பயிற்சி.


சாதாரணமாக யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள்: 

யோகா செய்யும் போது, அதிகப்படியான எடை கண்டிப்பாகக் குறைந்துவிடும். யோகா ஓர் உடற்பயிற்சியாக மட்டும் செயல்படுவதில்லை. அது நம்  அமைப்புகளுக்கு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடாமல் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புத்தன்மை வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உடல் உண்ணும். அதற்கு மேல் எதையும் அது உண்ணாது. மற்ற உடற்பயிற்சிகளையோ அல்லது உணவுத் திட்டங்களையோ கடைப்பிடித்தால், எப்போதும் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். ஆனால் யோகப் பயிற்சிகள் செய்து வரும்போது, உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும். நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக் கொள்கிறது. இதுதான் யோகாவில் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசமும் நன்மையும்.

நம் வாழ்வியலில் நெடுநீழ் ஆயுளோடு இருப்பதற்கு உதவும் இத்தகைய யோக கலையை பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு ஒரு பயிற்சி கலையாக கற்பித்தல் மிகவும் நன்மை பயக்கும். குழந்தை பருவத்தில் இருந்து இந்த கலையை கற்று வரும் பொழுது குழந்தைகளுடைய வளர்ச்சி என்பது உடல் மற்றும் மன ரீதியாகவும் ஆதித ஆற்றலை பெறுவார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF