கனடாவிலிருந்து திருச்சி வந்த மூவருக்கு கொரோனா

Apr 24, 2022 - 01:08
Apr 24, 2022 - 02:05
 676
கனடாவிலிருந்து திருச்சி வந்த மூவருக்கு கொரோனா

தமிழகம் முழுவதும்  மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. திருச்சிக்கு கனடா நாட்டில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டிலிருந்து தஞ்சாவூரில் உறவினர் திருமணத்திற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விமான மூலம் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகம் வந்துள்ளனர்.

திருமணத்திற்கு செல்வதற்கு முன்பு திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். விமான நிலையம் வந்த உடனே செய்யப்பட்ட சோதனையில் முதலில் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. திருமணம் முடிந்து மீண்டும் திரும்பிய போது அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் கொரானா தடுப்பூசி செலுத்தி இருந்ததால் அவர்களுக்கு நோய் தாக்கம் குறைவாக இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்காவது அலையின் தொடக்கமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரனா அதிகரிக்க தொடங்கி உள்ளது.எனவே திருச்சி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கொரானா அதிகரிப்பதால் அதிக மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம்  மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தீவிரப்படுத்தவும் RTPCR சோதனையை அதிகரிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO