திருச்சியில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பதிவு

திருச்சியில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று (01.05.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. லால்குடி 17.5மி.மீ,கல்லக்குடி16.4, புள்ளம்பாடியில் 88.4 மி.மீட்டர், சமயபுரம் 38.4மி.மீட்டர்,

கோவில்பட்டி 8.2 மி.மீ, தேவ மங்கலம் 4.4 மில்லி மீட்டர் நந்தியார் ஹெட் 125.4 மில்லி மீட்டர், முசிறி 1 மில்லி மீட்டர், புலிவலம் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

அதேபோல், மருங்காபுரி 1 மி.மீட்டர், துவாக்குடி ஐஎம்டிஐ 47.3மி.மீட்டர் தேன்பரநாடு 57 மி.மீட்டர், துறையூர் 70 மி.மீட்டர், பொன்மலை 12மி.மீட்டர், திருச்சி விமான நிலையம் 30.3 மி.மீட்டர், திருச்சி ஜங்ஷன் 22மி.மீட்டர், திருச்சி டவுன் 17 மி.மீட்டர் ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 652.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 27.17ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn