ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 6 மக்கள் நலத்திட்டங்கள்
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழா பலவகையில் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்
ஒரு பகுதியாக 6 திட்டங்கள் தொடங்கப்பட்டன.அதில் முதல் இரண்டு திட்டங்கள் ஆன மாற்றம் மற்றும் விழுதுகள் திட்டத்திற்கான நிதி திரட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மாற்றம்: ஒரு கிராமத்தை ஸ்மார்ட் கிராமமாக மாற்றுதல் மற்றும்விழுதுகள் 100 - முதல் தலைமுறை 100 மாணவர்களுக்கு இலவசக் கல்வி போன்ற இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்திற்கான நிதி திரட்டும் வகையில்,பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு காட்சி முழுவதும்(PS-I இன் ) பதிவு செய்யப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிளப்புகள், ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள், நலம் விரும்பிகள், மருத்துவர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
நல்லுள்ளம் மிக்க நன்கொடையாளர்களின் உதவியுடன், 200 வீடற்ற குழந்தைகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளை திரைப்படத்தை காண அழைத்துச் செல்ல முடிந்தது. நிர்வாகத்தின் அன்பான செயலுக்கு குழந்தைகள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி இரண்டு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
மாற்றம்: கல்லூரியால் தத்தெடுக்கப்பட்ட கிராமமான தளுதலப்பட்டியை மாதிரி ஸ்மார்ட் கிராமமாக மேம்படுத்துதல்.
விழுதுக்கள்: திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் கல்லூரியில் சேர்ந்த 100 முதல் தலைமுறை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி. இந்த நிதி திரட்டும் நிகழ்வு ஒரு நல்ல நோக்கத்திற்காக நடைபெறுவதால், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO