தோட்டக்கலைத்துறை சார்பில் 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள்

தோட்டக்கலைத்துறை சார்பில் 75 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள்

திருச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் (2024-25)-ம் ஆண் டுக்கு 80 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் இந்த 80 கிராமங்களில் மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி, எக்டேர் ஒன்றுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.7,500 மதிப்பிலான காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்களும், ஊட் டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200 மதிப்பில் மா, கொய்யா, பலா, எலுமிச்சை மற்றும் சீத்தா போன்ற 5 வகை கொண்ட பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 75 சதவீதம் மானியத்தில் ஆதார் அட்டை நகலுடன் ரூ.50 மட்டும் செலுத்தி பயனாளிகள் பழச்செடிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், விவசாயிகள், தங்களது விவரங்களை https://www.tnhorticulture.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision