முசிறியில் கொலை வழக்கில் வெளியில் வந்தவர் நகை திருட்டு வழக்கில் கூட்டாளியுடன் கைது
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற வழக்கில், முசிறி தா.பேட்டை ரோட்டைச் சேர்ந்த ராஜ் மகன் அழகுமணி (40) இவர் மீது ஏற்கெனவே முசிறி காவல் நிலையத்தில் ரெண்டு கொலை வழக்கு மற்றும் இரண்டு மணல் கடத்தல் வழக்கு உள்ளது.
மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர் அதே சிறையில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி, கொளக்குடி தாலுகா, வன்னியர் தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் ரமேஷ் (40) இவர் மீது சுமார் 57 திருட்டு வழக்குகள் பல்வேறு காவல்நிலையத்தில் உள்ளது. இவர்கள் இருவரும் சிறையில் பழக்கமாகி ஜாமினில் வெளிவந்த நிலையில், அழகுமணி தனது கூட்டாளியான ரமேஷை முசிறி அழைத்து வந்து தங்க வைத்து முசிறி பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டின்பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து செகுசாக இருந்து வந்தனர்.
முசிறி பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்து வந்த நிலையில் காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் தனிப்படையை சேர்ந்தவர்கள் சிசிடிவி பதிவின் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் தா.பேட்டை ரோடு அருகே உணவகம் முன்பு நின்று கொண்டிருந்த ரமேஷை சந்தேகத்தின் பெயரில் கைது செய்த போலீசார் நிலையம் அழைத்து வந்து மேல்விசாரணை மேற்கொண்டதில் முசிறி பகுதிகளில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இதற்கு உடந்தையாக சிறையில் தனக்கு நண்பரான அழகுமணி இருந்ததாகவும் போலீசார் விசாரணையில் ரமேஷ் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் அழகுமணியை அவரது வீட்டில் வைத்து கைது செய்து இவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த சுமார் 10 பவுன் (தங்க நகை கட்டி) மற்றும் 340 கிராம் (வெள்ளி கட்டி) ஆகியவை கைப்பற்றப்பட்டது. விசாரணையில் பாரிவள்ளல் நகரில் அசோக் என்பவரது வீட்டில் திருடியது என தெரியவந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision