திருச்சி ஆஃபீஸர்ஸ் கிளப்பை இழுத்து மூடிய மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ராஜா காலனி பகுதியில் செயல்பட்டு வந்த 58 வருட பழமையான ஆஃபீஸர்ஸ் கிளப் 16.9 கோடி ரூபாய் குத்தகை பணம் செலுத்தாததால்
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இழுத்து மூடினார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம் 1964 முதல் இந்த கிளப் செயல்பட அனுமதித்தது. 27 ஆயிரத்து 971 சதுர அடி பரப்பளவு கொண்டது இந்த கிளப். டென்னிஸ் விளையாடுவதற்கான மைதானம் மற்றும் பொழுதுபோக்குக்கான அறைகளும் தனித்தனியே இந்த கிளப்பில் உள்ளது.
1997 ஆம் ஆண்டு முதல் வருவாய்த்துறைக்கு குத்தகை பணம் செலுத்தாததால் நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. தற்பொழுது மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற அனுமதி பெற்று நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில் மேற்கு வட்டாட்சியர் K.ஷேக் முஜீப் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அனைத்து வாசல் கதவுகளையும் பூட்டு போட்டு மூடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் இந்த கிளப் மாவட்ட நிர்வாகத்துக்காக கையகப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO