திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...
திமுக தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு - பெரியார் கண்ட கனவை அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது.இந்திய வரலாற்றில் இது மாபெரும் சமூக புரட்சி - இந்தியாவிற்கே இது வழிகாட்டும் நிகழ்வு.
இதை பலர் எதிர்க்கின்றார்கள் - இந்துக்களை தான் நியமிக்கின்றனர்.ஆனால் இதற்கு பலர் கூக்குறல் இடுகிறார்கள்.
நீதிமன்றம் செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள் - ஆனால் தி.மு.க தலைவர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என கூறி உள்ளார்.நேற்று 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோம் - விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெக்காசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம்( Zoom இணைப்பு கலந்துரையாடல் நிகழ்வில் நேற்று மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்).
நாடாளுமன்ற தேர்தலில்
எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதே சவால். ஒற்றுமையே முதல் சவால்.தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளர் தேர்வு கட்டாயம் இல்லை என்றார்.ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார் - அவரது கருத்தில் அவர் நிலையாக நின்றால் சரி.
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் குறித்த கேள்விக்கு ? இது குறித்து முதல்வரிடத்தில் மனு அளித்துள்ளோம் - ஐ.ஐ.டி வல்லுனர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது.அவர்களின் அறிக்கைக்கு பின்னர் எல்லாவற்றையும் சரி செய்து தான் அங்கு மக்களை குடியேற அனுமதிப்பார்கள்.
ஒப்பப்தாரார்கள் இது போன்று கட்டிடத்தை அலட்சியத்துடன் கட்டி உள்ளனர்.அடிதட்டு மக்கள் என்பதாலே இவர்கள் இவ்வளவு மோசமாக கட்டி உள்ளனர்.இனி அந்த ஒப்பப்தாரார்கள் எங்குமே பணி செய்ய கூடாது - அதே போல் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழியிறுத்துவோம்.
பெண்களுக்கு வழிபாட்டில் சம உரிமை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும் கேள்விக்கு பதிலளித்த அவர் கொடநாடு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றால. அவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 'இந்த வழக்கில் எங்களை இணைக்க முடியாது. குற்றம் சாட்ட முடியாது' என்று அவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் மீது எவ்வித தவறும் இல்லாத பட்சத்தில், அவர்கள் ஏன் பதற வேண்டும்? ஒரு வழக்கை ஒருமுறைக்கு மேல் பலமுறை விசாரிக்க முடியாது. ஆனாலும் அவ்வழக்கில் தவறு இருப்பதாக தமிழக அரசு கருதினால், விசாரணைக்கு அவர்கள் இருவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று திருமா கூறினார்.
மேலும் "பெரம்பலூர் சாதிக் பாட்ஷா தற்கொலை வழக்கு மறுவிசாரணைக்கு உட்படுத்தபடுமா?" என்ற கேள்விக்கு, "அவர்களது கோரிக்கை நியாயமானது என்றால், அரசு அதை பரிசீலிக்கும். பரிசீலிக்க வேண்டும்" என்றார்.