சாலையின் நடுவே உள்ள கற்கள் அகற்றப்படுமா? கழிவு நீர் வெளியேறாமல் தவிர்க்கபடுமா?

சாலையின் நடுவே உள்ள கற்கள் அகற்றப்படுமா? கழிவு நீர் வெளியேறாமல் தவிர்க்கபடுமா?

திருச்சி வார்டு 50, கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட தென்னுர் பிரதான சாலையில், பழைய கழிவு நீர் கால்வாய் அகற்றிய போது விஸ்வநாதபுரம் அருகே உள்ள கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்ட கற்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்வோர், சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் புதிய சாக்கடை கட்டிய 3 நாளில் மீண்டும் உடைக்கப்பட்ட பகுதி. இதன் வழியாக பாதாள சாக்கடை மல கழிவுகள் சாலையில் ஓடி சாக்கடையில் கலக்கிறது. கடந்த ஆறு மாதமாக விஸ்வநாதபுரத்தில் நடுப்பகுதியில் பாதாள சாக்கடை வழியே கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்பதால் பாசன் பிடித்து கொசுக்கள் பரவி வருகிறது.

மேலும் தற்போது விஸ்வநாதபுரம், இரட்டை வாய்க்கால் இரு பகுதியிலும் கட்டப்பட்ட புதிய சிறு பாலங்கள் சாலை மட்டத்தை விட மிக உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது.   இதனால் மழை பெய்யும் நேரத்தில் சாலையில் இரண்டு தெருக்களில் வரும் தண்ணீர் முழுதும் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிக்குள் சென்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

தண்ணீர் பிரதான மெயின் ரோட்டிற்கு வராத காரணம் தவறான உயரத்தில் சிறு பாலம் கட்டியது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn