திருச்சி மீன் மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை- வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி மீன் மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை- வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சி மீன் மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை.ஆளும் கட்சியினர் டெண்டர் எடுத்துள்ளதால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீன் வாங்க வரும் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம்

நுழைவு கட்டண உயர்வை கண்டித்து மீன் மார்க்கெட் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லற வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம். மீன் மார்க்கெட் வியாபாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு 

திருச்சி மாநகரில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தையில் திமுக ஆதரவாளர்கள் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்....2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2028 ஆண்டு மார்ச் வரை ஒப்பந்தத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி...

இதுவரை மீன் மார்க்கெட் வருகை தரும் பொது மக்களின் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் நிலையில், தற்போது பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் 10 என அறிவிப்பு.அதேபோல பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் இருந்து மீன்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்பது தற்போது ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் என அடாவடி வசூல் 

நுழைவு கட்டணத்தை குறைக்க கோரி மீன் மார்க்கெட் கடைகளை திறக்காமல் வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision