திருச்சி சாரநாதன் கல்லூரியில் பான்கார்டு முகாம்

திருச்சி சாரநாதன் கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணித் திட்டம் அமைப்பானது மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படும் வகையில் திருச்சி கூகோல் (googol)கம்ப்யூட்டர்ஸ் பான் கார்டு சேவை முகாமை கல்லூரி வளாகத்தில் (20. 2.2025 )அன்று நடத்தியது.
இம்முகாமிற்கு கல்லூரி நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கே கார்த்திகேயன் அவர்கள் தலைமை தாங்கினார். கூகோல் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.லோகநாதன் முன்னிலை வகித்தார். இம் முகாமில் புதிய பான் கார்டு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் ஆகிய சேவைகளை வழங்கினர். இதன் மூலம் 95 பயனாளிகள் (8பேராசிரியர்கள் மற்றும்87 மாணவர்கள்) பயனடைந்தனர்.
கல்லூரி செயலர் ஸ்ரீ எஸ் ரவீந்தர் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் டி.வளவன் அவர்கள் சாரநாதன் கல்லூரி இத்தகைய பயனுள்ள முகாம்களை நடத்துவது பெருமைக்குரியதாகும் நாட்டு நலப்பணித் திட்ட உதவிகளையும் சேவைகளையும் பாராட்டுவதாக தெரிவித்தனர். திருச்சி கூகோல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் நன்முறையில் நடத்திக் கொடுத்ததற்காக நன்றியை தெரிவித்தனர் மேலும் இம்முகாம் வெற்றி பெற தங்களை ஈடுபடுத்திக் கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அளப்பரிய சேவைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இத்தகைய முகாம்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை இம்முகாமில் பயனடைந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.கார்த்திகேயன் அவர்கள் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision