வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கான செலவு தொகை எவ்வளவு சொல்லுங்க - விவசாய சங்க தலைவர் மனு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நா. ராஜேந்திரன் விவசாய மண்டல துணைத் தலைவர் அவர்கள் திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டி
இந்து சமய அறநிலை ஆட்சித் துறைக்கு கேட்டுள்ளார். இதில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டதா? யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களில் எண்ணிக்கை, கோயில் அர்ச்சகர்கள் நிர்வாக ஊழியர்கள் நிர்வாக அதிகாரி அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் கூட்டாகவோ தனியாகவோ
பொதுமக்கள் பக்தர்கள் தொழிலதிபரிடம் பெறப்பட்ட உபயம் பணமாக இருப்பின் அதன் விவரம்,கோயில் திருப்பணி துவங்கிய நாள் முதல் கும்பாபிஷேகம் முடிந்தவரை செலவிடப்பட்ட செலவினத் தொகை பொருள் விபரம் பற்றியும் மேலும் பல தகவல்களை இச்சட்டத்தின் மூலம் இந்து சமய அறநிலை துறைக்கு கேட்டுள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision