நீதிமன்ற லிஃப்ட்டில் சிக்கிய வழக்கறிஞர்கள் - 30 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தனியார் கட்டிடத்தின் மாடியில் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு செல்ல லிஃப்ட் வசதி உள்ளது. இந்த லிஃப்ட் டில் தான் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வழக்கிற்கு தொடர்புடைய நபர்களும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த லிஃப்ட் இன்று திடீரென பழுதாகி நின்று விட்டது.
இந்த லிஃப்டில் 6 வழக்கறிஞர்கள் சிக்கிக் கொண்டனர். லிப்டில் சிக்கிய வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சக வழக்கறிஞர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலக போக்குவரத்து சுரேஷ் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் ராஜா, சுரேஷ், சசிகுமார், அருண்பாண்டியன், மனோஜ்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் லிஃப்டை உடைத்து ஏணி வழியாக வழக்கறிஞர்களை பத்திரமாக மீட்டனர். இந்த லிஃப்ட் அடிக்கடி பழுதாகி வருவதாகவும், ஏற்கனவே மாட்டிக் கொண்டவர்களை லிஃப்டை உடைத்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision