இல்லம் தேடி கல்வி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்

இல்லம் தேடி கல்வி  இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்

 மணப்பாறை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாமினை  பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி ஊராட்சி தொப்பநாயக்கன்பட்டியில், திமுக இளைஞரணி சார்பில்  இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உறுப்பினராக பதிவு செய்துக்கொண்ட இளைஞரிடம் ஆவணங்கள் சரிபார்த்து படிவத்தை பூர்த்தி செய்து முகாமினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

 
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO