வாழை நாரிலிருந்து பட்டுப்புடவை தயாரிக்கும் தொழிற்சாலை பெட்டவாய்த்தலையில் அமைக்கப்படும் என்று கு.ப. கிருஷணன் வாக்குறுதி
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கு .ப. கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் இவர் நேற்று அந்தல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் கீழ ஆரியம் பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் .
அப்போது அவருக்கு அந்த பகுதியில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் வான வெடி வெடித்தும் சிறப்பாக வரவேற்றனர் அதனை தொடர்ந்து தேவஸ்தனம்,எல்லக்கரை, பழையூர் மேடு,உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .பின்னர் பேட்டவாய்த்தலை கடைவீதி பேசும்பொழுது
அதிமுக அரசின் வெற்றி சாதனையான 57லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை கூறினார்.
இந்திய துணை கண்டங்களில் மேற்படிப்பிற்கான மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுதான். 1996 ல் அமைச்சராக பொறுப்பேற்று இருந்த போது கீழ ஆரியம் பட்டியில் இருந்து பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்ததை திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். மேலும் இந்த பகுதி மக்களுக்காக
வீட்டுக்கொரு கழிப்பிட வசதி கட்டாயம் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் கூறுகையில்இந்தபகுதியி்ல் உள்ள பெண்கள் சிறிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இந்த பகுதியில் சிறு குறு தொழில்கள் மேம்பட அதிமுக அரசு நிச்சயமாக வழிவகை மேற்கொள்ளும்.மேலும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்தால் தான் நம் வாழ்க்கை தரம் வளர்ச்சி பெறும் இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை வளம்பெற வாழை நாரிலிருந்து பட்டுப்புடவை தயாரிக்கும் தொழிற்சாலை இந்த பெட்டவாய்த்தலை பகுதிகளில் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதி கூறி உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுக்கு சேவை செய்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொன்டார்.
பின்னர் அதனை நொடர்ந்து சிறுகமணி பேரூராட்சி,காவல்காரபாளையம்,எஸ்.புதுகோட்டை,பெருகமணி,அணலை,திருப்பராய்த்துறைகொடியாலம்,புலிவலம், உள்ளிட்ட பல இடங்களில் வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அழகேசன்,முத்துகருப்பன்,பாரதீய ஜனதா கட்சியின் மண்டல் தலைவர் ஈஸ்வரன் ,உள்ளிட்ட கூட்டனி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU